Close
நவம்பர் 24, 2024 11:38 மணி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேளாண்துறை ரூ.31.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை

திருமயத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி அளித்த அமைச்சர் ரகுபதி. உடன் ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேளாண்துறை ரூ.31.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்களை,   வழங்கினார்.

 பின்னர்  சட்ட அமைச்சர் பேசியதாவது விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல் படுத்தி வருகிறார். தமிழக வரலாற்றில் முதல்முறையாக விவசாயத்திற்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக் கப்பட்டது.

இதன்மூலம் விவசாயிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் உறுதுணை யாக இருக்கும்.
மேலும் வேளாண் துறையின்கீழ், தொலைநோக்குத் திட்ட மான தமிழ்நாட்டில் நிகர சாகுபடி பரப்பினை 60 விழுக்காட்டி லிருந்து 75 விழுக்காடாக உயர்த்துதல், அடுத்த 10 ஆண்டுக ளுக்குள் 10 லட்சம் எக்டர் சாகுபடி பரப்பினை 20 லட்சம் எக்டே ராக உயர்த்துதல், உணவு தானியங்கள் மற்றும் தேங்காய்,  பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப் பயிர் களுக்கான வேளாண் ஆக்கத் திறனை முதல் மூன்று இடங்க ளுக்கு கொண்டுவரும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், அட்மா, கூட்டுப் பண்ணையத் திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின்கீழ், பவர் டில்லர், தெளிப்பு நீர்பாசனக் கருவிகள், மழைத்தூவான், கைத்தெளிப்பான்.

தென்னைமரம் ஏறும் கருவிகள், தார்பாலின் போன்ற பல்வேறு விவசாய இடுபொருட்கள் ரூ.25,62,330 மதிப்பீட்டில் மானிய உதவியுடன் ரூ.31,86,771 மதிப்புடைய வேளாண் கருவிகளை உழவர் உற்பத்தி யாளர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top