Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

அரிமளம் ஆர்டிஓ – சைல்டு லைன் சார்பில் குழந்தைகளுக்கான திறந்த வெளி விழிப்புணர்வு முகாம்

அரிமளம்

அரிமளம் ஆர்டிஓ-சைல்டு லைன் சார்பில் பெருங்குடி பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாம்

அரிமளம் ஆர்டிஓ – சைல்டு லைன் சார்பில் குழந்தைகளுக் கான திறந்த வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் அரிமளத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆர்டிஓ சைல்டு லைன் சார்பில் குழந்தைகளுக்கான திறந்த வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அரிமளம் ஒன்றியம், பெருங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு குழந்தைகளால் நடத்தப்பட்ட திறந்த வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  தலைமையாசிரியர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.

குழந்தைகளின் பாதுகாப்பும், உரிமையும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி பள்ளியிலிருந்து தொடங்கி முக்கிய சாலை வழியாக பேரணியாக சென்று திருமண மண்டபம் சென்று நிறைவடைந்து.

இதில்,  சைல்டு லைன் மாவட்ட துணை இயக்குநர் குழந்தைவேலு பேசியதாவது:  குழந்தைகளுக்கு சைல்டு லைன் என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர் சசிகலா,ஊராட்சி செயலர் கருப்பையா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொன் கதிரேசன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வை யாளர் தமிழ்மணி.

பெரும்குடி துவக்கப்பள்ளி தலைமையாசிரியை லீமா செல்வி,சைல்டு லைன் துணைமைய ஒருங்கிணைப்பாளர் முனியம்மாள், 1098 அரிமளம் களப்பணியாளர் வசந்த பாரதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாணவ மாணவிகளுக்கு தேவையான சைக்கிள் ஸ்டேண்ட் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டி அனைத்து மாணவ மாணவியரும் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை ஊராட்சி மன்றத் தலைவரிடம் வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top