Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில்  சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகை: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை

பட்டு விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசளித்த ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  (29.03.2022) வழங்கினார்.
பட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வருடந்தோறும் அதிக அளவில் பட்டு உற்பத்தி செய்யும் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருடத்திற்கு 8 முறை பட்டுப் புழு வளர்த்து ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டிய விவசாயி களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்படுகிறது.

அதன்படி முதல் பரிசாக அரையப்பட்டியை சேர்ந்த தமிழழகன் என்பவருக்கு ரூ.25,000- மும், இரண்டாம் பரிசாக காயக்காடு கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவருக்கு ரூ.20,000 மற்றும் மூன்றாம் பரிசாக அரியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்து என்பவருக்கு ரூ.15,000 பரிசுத் தொகைகளை வழங்கிய ஆட்சியர், பட்டு வளர்ப்புத் தொழிலில்  விவசாயிகள் மென்மேலும் சாதனைகள் புரிய வேண்டுமென வாழ்த்து தெரிவித்தார்.

இதில்,பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ரெங்கபாப்பா, ஆய்வாளர் சத்யா, இளநிலை ஆய்வாளர்கள் கீதா, அகிலா, ராஜநாராயணன் மற்றும் அலுவலகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top