Close
நவம்பர் 22, 2024 6:58 மணி

கொத்தமங்கலத்தில் 641 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை

திருவரங்குளம் ஒன்றியம் கொத்தமங்கலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன். உடன் ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டம்,திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலத்தில், 641 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில்  நடந்த நிகழ்வில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  (30.03.2022) பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை,  வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:  பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலத்தில்; பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், வேளாண்மைத்துறை நலத்திட்ட உதவிகள், விலையில்லா சலவைப் பெட்டிகள், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, இறப்பு நிவாரணம், குடும்ப அட்டை ஆகிய திட்டங்களின்கீழ் 433 பயனாளிகளுக்கு ரூ.85,98,343 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்வழங்கப்பட்டு ள்ளது.

மேலும் 208 பயனாளிகளுக்கு ரூ.59,80,452 மதிப்பீட்டில் நகைக்கடன் தள்ளுபடிக்கான ஆணையும் என திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலத்தில்; மொத்தம் 641 பயனாளிகளுக்கு ரூ.1,45,78,795 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்  இப்பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக சாலைவசதி, பள்ளி உட்கட்டமைப்புகள் போன்ற பல்வேறு அடிப்படை வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே தமிழக அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதனை உரிய முறையில் பயன்படுத் திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இதில்,மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ் வரி,  திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top