Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

சிவகங்கையில் புத்தகத்திருவிழா: அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெறவுள்ள புத்தகத்திருவிழா ஆலோசனைக்கூ ட்டத்தில் பேசிய ஆட்சியர் மதுசூதன்ரெட்டி

சிவகங்கையில் புத்தகத்திருவிழா நடத்துவது குறித்து அனைத்துத்துறை  அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், மாவட்ட ஆட்சித்தலைவர்  கூறியதாவது: சிவகங்கை  நகரில் உள்ள  அரசு மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 15.04.2022 முதல் 26.04.2022 வரை 11 நாட்கள் புத்தக்கத் திருவிழா நடைபெற உள்ளது. தினந்தோறும் காலை 10  மணி முதல் இரவு 10  மணி வரை நடைபெற உள்ளது. இதில், காலை 10 மணி முதல் மாலை 4  மணி வரை கூட்டாக புத்தகம் வாசித்தல், இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டும்.

மாலை 4  மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், உள்ளுர் சார்ந்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுப்பொருட்கள் போன்றவை இடம் பெற உள்ளன. புத்தகத் திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு 100 அரங்குகள் புத்தக விற்பனைக்கும், 10 அரங்குகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமைக்கப்படுகிறது.

புத்தகத்திருவிழாவில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளுர் எழுத்தாளர்கள் எழுதி வெளியிட தயார்நிலையில் உள்ள புத்தகங்களை, இலக்கியம் சார்ந்த கூட்டங்களின் போது வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, எழுத்தாளர்கள் முன்கூட்டியே தங்களது புத்தகம் குறித்த பிரதியுடன் மாவட்ட நிர்வாகத்தினை தொடர்பு கொள்ளலாம். நிகழ்வுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் செயலி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல வாகன வசதிகள், தேவையான இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும்.  பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கை களுக்காக காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழுவினர் ஈடுபடுவார்கள். அவசர தேவை கருதி பொது சுகாதாரத்துறையினர் தனி அரங்கம் அமைத்து தேவையான மருத்துவ வசதிகளை வழங்க உள்ளனர்.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் அடையாளமாகத் திகழும் கீழடி அகழாராய்ச்சி பொருட்கள், கோட்டைகள், அரண்மனைகள், பாரம்பரிய உணவு வகைகள், நாட்டுப்புறக்கலைகள் போன்றவை இடம்பெற உள்ளன.

எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது அறிவுச்சார்ந்த தேடலுக்கான களமாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கும் இடமாகவும், நண்பர்களுக்கு பரிசாக புத்தகங்களையே வழங்கிடும் முறையினை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும், இந்த புத்தகத்திருவிழாவினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எம்.வீரராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரத்தினவேல், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் வானதி, உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் எஸ்.பிரபாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top