Close
நவம்பர் 24, 2024 5:07 காலை

நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு…

கல்வி

கல்வியாளர்கள் சங்கமம் நிர்வாகி சதிஷ்குமார்

நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு..

2008 முதல் 2018 வரையிலான 10 ஆண்டுகளில்அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவப்படிப்பிற்குத் தேர்வுபெற்ற மாணாக்கர்களது மொத்த எண்ணிக்கையே 50 க்கும் குறைவே. உச்சபட்ச மதிப்பெண் பெறும் ஏழை மாணவ, மாணவியருக்கு சில நேரங்களில் அது சாத்தியமாகி யிருக்கின்றது. இல்லையேல் பணம் படைத்தவருக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் வழி திறந்திருக்கின்றன.

நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டங்களில் அரசுப்பள்ளி களுக்கென தனி இடஒதுக்கீட்டைஎந்த அரசும் கொடுக்க வில்லை.கொடுத்ததும் இல்லை. கிராமப்புற மாணவர்களுக் கான இட ஒதுக்கீடு எனச் சில காலம் இருந்துவிட்டு, பின்பு அரசியல் சித்து விளையாட்டுக் களில் அதுவும் காணாமல் போய்விட்டது.

தேர்வைக் கண்டுபயம்கொள்ளுதலும்,தேர்வில் தோல்வி அடைந்ததற்காக உயிரை மாய்த்துக்கொள்ளுதலும்
NEET ல் தொடங்கியதில்லை.10, 12 ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளிலும் முன்னரே நிகழ்ந்துள்ளது.தொடர்ந்தும் வந்துள்ளது.

மதிப்பெண்களைத் துரத்திக்கொண்டிருக்கும் வரை,
இத்தகைய அவலங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.அனிதாவின் மரணம் நீட் தேர்வினால் ஏற்பட்டதென் பதை,ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.ஆனா ல்அடுத்தடுத்த மரணங்கள் என்பது அரசியலாக்கப்பட்டது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

மதம், இனம்,சாதி, பொருளாதாரம் என எவ்வித பாகுபாடு மின்றி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5%  இட ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வின் அடித்தட்டிலுள்ள குடும்பங்களிடமிருந்தும் மருத்துவர் கள் உருவாகத் தொடங்கியிருக்கின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அரசுப்பள்ளிகளில் இருந்து 950 க்கு மேற்பட்ட மருத்துவர்கள் தமிழ்நாட்டிற்குக் கிடைத் துள்ளனர்.இவர்களில் அநேக நபர்கள் அடித்தட்டு நிலையில் உள்ள மக்கள்.பெரும்பாலும் எல்லா மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகத் தொடங்கி இருக்கின்றனர்.

சேலம், புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் அரசுப்பள்ளிகளில் நடப்பு ஆண்டில் முன்னிலையில் இருந்ததைக் கவனிக்க வேண்டும். பின் தங்கிய் மாவட்டங்களாக கருதப்படும் மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் புறப்பட்டிருப்பதன் காரணம் எதனால்?  எங்கிருந்து? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த கால தேர்வுமுறைகளில் 12 -ஆம் வகுப்பு மதிப்பெண் முறைகளில் கிடைக்காத மருத்துவ வாய்ப்பு 7.5% இட ஒதுக் கீட்டின் மூலம் எளிய மக்களுக்குக் கிடைத்துள்ளது என்பதை இந்த இடத்தில் கவனிக்க வேண்டியிருக்கிறது.

அத்தோடு மதிப்பெண்களை நோக்கி ஓடும் மனநிலையும் தற்போது மாறத் தொடங்கியிருக்கிறது.அரசுப் பள்ளிகளில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் இருந்து தேர்வான மருத்துவ மாணவிகளை நேர்காணல் செய்தால் தெரியும்.அவர்களுக்கான வாய்ப்பு அரசுப் பள்ளியிலிருந்தே உருவானது என்பது புரியும்.

இனிவரும் நாட்களில் மக்களுக்கான மருத்துவர்கள்
அதிகம் உருவாக வாய்ப்பும், கிராமப்புறங்களில்தாய் மொழி பேசும்மருத்துவர்களையும் நம்மால் உருவாக்க முடியும். NEET க்கு தயாராகுங்கள் NEAT ஆகத் தயாராகுங்கள்.

குறிப்பு: தற்போதைக்கு நீட் ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை என்னும் நிலையில், அதனை நேர்மறையாக எதிர்கொண்டு, மாணவர்கள் அனைவரும் அத்தேர்வினை எதிர்கொள்வதற்கு தயாராகுங்கள்.

இனியும் இதில்அரசியல் பேசிமாணவர்களைக் குழப்பிவிட யார் முயன்றாலும், காதில் கேட்காதீர்கள் என்று கல்வியாளர்கள் சங்கம் நிர்வாகி  சிகரம் சதிஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top