Close
ஏப்ரல் 5, 2025 12:56 மணி

வெளிநாட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்கல்

புதுக்கோட்டை

வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பாடுதொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

வெளிநாட்டில் பணியாற்றியபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுத்தொகையை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, காண்டியர் தெருவைச் சேர்ந்த ராஜோப் என்பவர் சவுதி அரேபியாவில் இறந்ததைத் தொடர்ந்துட அவருக்கு சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.1,00,741 க்கான காசோலையினை, அவரது மனைவி உமாமகேஸ்வரியிடமும்.

இதைப்போல், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, கிளாங்காடுவைச் சேர்ந்த முகமது கபிப் ரகுமான் என்பவர் சவுதி அரேபியாவில் இறந்ததைத் தொடர்ந்து, அவருக்கு சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.51,844 க்கான காசோலையினை, அவரது மனைவி பாத்திமாபேகமிடமும்   மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு  வழங்கினார். இந்நிகழ்வில், நீதியியல் பிரிவு மேலாளர் சார்லஸ் உடனிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top