சுகாதாரம் காப்போம்…
அனுதினம் உழைப்பதும்
அளவோடு உண்ணுவதும், உறங்குவதும்…
முறையான வாழ்க்கையென்றால்
உடம்பில் ஊன் மிகாது உளைச்சல் தங்காது!
நாக்கு சுவைக்கு கட்டுப்பட்டால்
நாடி நரம்புகள் சுகத்தை இழந்துவிடும்,
போதைக்கு அடிமையானால்
வாழ்க்கை ,பாதையே மாறிவிடும்
புகை பிடிக்கும் எண்ணம்கொண்டால்
நம்மை பகை பிடிக்கும் எண்ணம் கொள்ளும்
சுயநலமும், சோம்பேறித்தனமும் சோகத்தில் ஆழ்த்திவிடும் வாழ்வே சோதனையாகிவிடும்.துயர் வரும்முன் காப்பதே அறிவாகும்!அதனால் வளம் கூடி வரும் வறுமைஓடிவிடும் வசந்தங்கள் தேடி வரும்அகத்தினுள்இன்பத்தை ஆரோக்கியம்கூட்டி வரும்!
பசிக்க வேண்டும் அதன்பின்
அளவோடு புசிக்கவேண்டும்
அது நன்கு செரிக்கவேண்டும்
அஃதுடம்பு மட்டுமே நிலைக்கும் இதை
நாம் அறியவேண்டும்!
மெய்யைய் மெய்யாய் காக்க
மேனியின் வலியை போக்க
வாலிபத்தை வயதோடு
சேர்க்க நடையும், ஓட்டமும் வேண்டும்…
நாளும் யோகா பயிற்சி வேண்டும்!
இதை நார் சத்து உணவுகள் தூண்டும்!
எதையும் அளவோடு பெற்றால்
வளமோடு வாழலாம்
பேராசையை விட்டால்
பேரின்பம் கொள்ளலாம்
ஆரோக்கியத்தை பின்பற்ற
ஆனந்தமாய் ஆயுள் முழுவதும் வாழலாம்
உடல் தூய்மை யாகும்போது
உணர்வுகளும் தூய்மையாகும்
உயர்வான எண்ணங்களோடு
உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம் ஆகும்!!
ஆக்கம்: மரு.மு.பெரியசாமி.புதுக்கோட்டை.