ஈரோடு அருகே தனியார் ஆலையில் வட மாநில தொழிலாளி உயிர் இழந்ததால் இழப்பீடு கோரி நடந்த போராட்டத்தில் ஊழியர்கள் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் இயங்கி வரும் எஸ்.கே.எம் பூர்ணா ஆயில் நிறுவனத்தில், நள்ளிரவு லாரி மோதிய விபத்தில் பணியில் இருந்த பீகாரை சேர்ந்த காமோத்ராம் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்தத் தகவல் அறிந்த சக வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த வந்த மொடக்குறிச்சி போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தினர். நிறுவனத்தின் பாதுகாவலர் அறையை அடித்து நொறுக்கினர். இதில் ஒரு பெண் ஆய்வாளர் உட்பட 7 போலீஸார் காயடைந்தனர். 4 வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.
கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 20 பேரை போலீஸார் கைது செய்தனர். இதன் பின் உயிரிழந்த சடலத்தை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் எடுத்து சென்றனர். இந்த நிறவன வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.