ராமநவமி விழாவை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் விஸ்வரூப சீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை சந்தன கூடு ஊர்வலமும், இதைத்தொடர்ந்து, 108 சந்தன கலச அபிஷேகமும் நடந்தது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவர் சாய்பாபாவிற்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதையடுத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலையில் ராமநாம மகிமைகள் குறித்து சிவநேசன் சொற்பொழிவாற்றினார். இதைபோல், ராமநவமியையொட்டி நேற்று ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.