Close
நவம்பர் 22, 2024 12:58 மணி

வானிலை… தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு இடியுடன்மழை பெய்ய வாய்ப்பு

மழை நிலவரம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஒரு வாரம் இடியுடன் கூடிய மழை  பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த பதிவில் எதிர்ப்பார்த்தது போல கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்கள், தெற்கு டெல்டா மாவட்டங்கள், மேற்கு, மேற்கு உள் மாவட்டங் களில் ஆங்காங்கே பல பகுதிகளில் மழை பதிவாகி வருகிறது.

இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்று சுழற்சி தற்போது தென்மேற்கு வங்கக் கடல் இலங்கை ஒட்டி தமிழகம் நெருங்கி வருகிறது. இந்த சுழற்சி படி படியாக மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் வழியாக தென் கிழக்கு அரபிக்கடல் நோக்கி நகரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. அடுத்த ஒரு வாரம் வரை காற்று சுழற்சி தென்னிந்திய ஒட்டியே தொடரும் வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு இடிமழை தொடரும் வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்கள் மற்றும் தெற்கு டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, புதுகோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரம் பெரும்பாலான பகுதிகளில் இடிமழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரிரு பகுதிகளில் மிக கனமழையும் இருக்கக்கூடும்.

மேலும் மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்டங்கள் மற்றும் மத்திய உள் மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கருர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, மாவட்டங்களில் ஆங்காங்கே பல பகுதிகளில் இடிமழைக்கும் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஆங்காங்கே, ஒரு சில பகுதிகளில் இடிமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப் பாக குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழைக்கும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் கேரளா மற்றும் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய உள் பகுதிகளிலும் பரவலான மழைக்கும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top