பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பொன்னமராவதி பாஜக சார்பில் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் ஒன்றிய தலைவர் ந.சேது தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் பி.வடமலை, முன்னாள் ஒன்றிய தலைவர் ஆர்.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொன்னமராவதி பேரூராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது. பொன்னமராவதி பேரூராட்சியை விரைவில் நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென மாநில அரசை கேட்டுக் கொள்வது.
பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியை தூர்வாரி புதிய சுற்று சுவர் எழுப்பி சுற்றிலும் நடைபாதை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுத்தம் சுகாதாரமின்றியும், போதிய தண்ணீர் வசதியும் இல்லாமல் இருக்கும் பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்சிக்கு புதிய ஒன்றிய தலைவர்கள் அறிவிக்கப்படும் வரை கட்சியின் அமைப்பை பலப்படுத்துவதற்காக பொன்னமராவதி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் முன்னாள் ஒன்றிய பொதுச்செயலாளர் கல்லம்பட்டி சிவலிங்கம் , பொன்னமராவதி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். குமரன் ஆகிய பொறுப்பாளர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதில், செயல்வீரர்கள் ஸ்டார், சுந்தரேசன், திருக்களம்பூர் க.சரவணன், பன்னீர்செல்வம் ரா.கார்த்திக், தச்சம்பட்டி சரவணன், அம்பலகரன்பட்டி வி.செல்வம், முத்து, வார்ப்பட்டு ஆனந்த், சடையம்பட்டி சீனிவாசன், குமாரபட்டி வடிவேல், காமராஜர் நகர் சண்முகம், பொன்னமராவதி தர்மராஜா, கருப்பையா, கந்தசாமி, வெங்கட்ராமன், ஜெய்சங்கர், இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளர் திருக்களம்பூர் ஆர்.கணேசன் நன்றி கூறினார்.