Close
நவம்பர் 22, 2024 12:53 மணி

புதுக்கோட்டை அருகே மறமடக்கியில் நடந்த ஜல்லிக்கட்டில் 25 பேர் காயம்

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே மறமடக்கியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன். உடன் ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கியில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 25 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கியில்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியினை,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்    தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

 முன்னதாக, ஜல்லிக்கட்டு தொடர்பான உறுதிமொழியினை அனைவரும்  ஏற்றுக்கொண்டனர். பின்னர் அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்ததாவது: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள்; அரசு விதிமுறைகளுக்குட்பட்டும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்திட அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 646 காளைகள், மற்றும் 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் காளைகள் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டி அரசு விதிமுறைகளின்படியும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்பட்டது என்றார் அமைச்சர்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதி மெய்யநாதன், வட்டாட்சியர் காமராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 25 பேர் காயமடைந்தனர். அனைவருக்கும் ஜல்லிக்கட்டு தளத்தில்  இருந்து மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top