Close
நவம்பர் 21, 2024 11:31 மணி

ஆலங்குடி குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்…

குருபெயர்ச்சி

குருபெயர்ச்சி விழா

குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் குருபகவானுக்கு தனி சந்நிதி இந்த ஆலயம் நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் குரு பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா வருகிற 14-ஆம் தேதி வியாழக்கிழமை நடக்க இருக்கிறது. அன்று விடியற்காலை 4.36 மணியளவில் குரு பகவான் கும்பராசி யில் இருந்து மீனராசி க்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10 -ஆம் தேதி வரை முதல் கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது. குரு பெயர்ச்சிக்கு பிறகு பின்னர் ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.
குருபயர்ச்சி விழாவிற்காக கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட தகரத்தால் ஆன பந்தல் அமைக்கப்படுகிறது. 47 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசிக்க தடுப்புகள் அமைக்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஹரிஹரன் மற்றும் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top