மக்கள் பாதை முப்பெரும் விழாவில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பிற்குசிறந்த சமூக செயல்பாட்டு அமைப்பு எனும் விருது கிடைத்துள்ளது.
சென்னையில் மக்கள் பாதை ஏழாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இதில், எழுத்தாளர் டிஎஸ்எஸ். மணி பேசும்போது, நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை எது என்பதை அறிய முடிந்தது. குறிப்பாக எந்த பிரச்னைகளுக்கு நாம் எங்கு சென்று நிற்கிறோம் என்பதையும் யாரை குறித்து குற்றம் சொல்கிறோமா அவரிடமே நீதி கேட்டு நிற்கும் நிலைதான் நாட்டில் உள்ளது என்றார்.
எழுத்தாளர் தியாகு மதநல்லிணக்கம் சார்ந்து பல்வேறு கருத்துகளை பதிவு செய்தார்
மக்கள் பாதை தலைவர் நாகல்சாமி பேசும் பொழுது, மக்கள் பாதை தோன்றிய, வளர்ந்த, கடந்து வந்த பாதைகள், மக்களுக்காக மக்கள் பாதைகள் செயல்பட்ட விதம் பற்றி விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இதில்,அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பிற்கு சிறந்த சமூக செயல்பாட்டு அமைப்பு எனும் விருதை திசைகள் சார்பாக, டெய்சி ராணி, யோகானந்தி, அபிநய சக்தி, ராகேஷ், பூங்குன்றன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.