Close
நவம்பர் 25, 2024 2:31 மணி

புதுக்கோட்டையில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா:மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி

புதுக்கோட்டை

புதுகை டவுன்ஹாலில் நடைபெற்ற அமுதப்பெருவிழா கலை நிகழ்ச்சி

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினையொட்டி பள்ளி,  கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-ஆவது சுதந்திர தின விழா – சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  10.04.2022 அன்று தொடங்கி வைத்தார்.
இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தேசத்த லைவர்களை போற்றும் வகையிலும், விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்படக்கண்காட்சி நடத்தி, அக்கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிந்த மற்றும் அறியப்படாத சுதந்திரப்போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், வருவாய்த்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை,.

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஊகர வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
ஆட்சியர் கவிதா ராமு

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கூறியதாவது:
இந்த சுதந்திர தின அமுதப் பெருவிழா 10.04.2022 அன்று தொடங்கி 16.04.2022 வரை நடைபெறுகிறது. மாலை நேரங்களில் கலை குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி,  12.04.2022 இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி, புதுக்கோட்டை இராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாடல், தற்காப்புக் கலை, தமிழ் நாடகம் ஆகியவை அடங்கிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

13.04.2022 அன்று குளத்தூர் முத்துசாமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி களும், 14.04.2022 அன்று கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சி களும், 15.04.2022 அன்று சுப்பிரமணியபுரம் மற்றும் கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், 16.04.2022 அன்று அறந்தாங்கி மற்றும் அன்னவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சி களும், தொடர்ந்து 16.04.2022 வரை மாலை 6 மணி முதல் நடைபெறும்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்து, சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வரலாறுகள் மற்றும் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என  ஆட்சியர்  தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top