Close
நவம்பர் 22, 2024 8:46 மணி

தீயணைப்புத்துறை சார்பில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம்

புதுக்கோட்டை

புதுகை தீயணைப்பு நிலைய நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் மீட்புப் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில்   வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 1944 -ல் மும்பை விக்டோரியா துறைமுகத்தில் நின்றிருந்த கப்பலில் நேரிட்ட தீயை அணைக்கப் போராடிய தீயணைப்புத்துறை வீரர்கள் 66 பேர் எதிர்பாராத விதமாக அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர். அந்த நாளை நீத்தார் நினைவு நாளாக ஆண்டு தோறும் தீயணைப்புத் துறையினர் கடைபிடித்து வருகின்றனர்.

தீயணைப்புத் துறை பணியாளர்கள் 1967 ஆம் ஆண்டு முதல் இதுபோன்று நிகழ்வுகளில் இதுவரை 33 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியின்போது  வீரமரணமடைந்துள்ளனர்.

 நாடு முழுதும்  ஏப்ரல் 14 – வரை தீயணைப்பு மீட்பு பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த வீரர்களுக்கும் வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து இதே நாளில் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, புதுக்கோட்டை தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், அங்குள்ள தியாகிகள் நினைவுத்தூணுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர், இ.பானுபிரியா தலைமையில், மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ப.கார்த்திகேயன் மற்றும் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதே போல புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி யில்

பொன்னமராவதி
பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற நீத்தார் நினைவு நாள்

தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் உள்ள நீத்தார் நினைவுச் சின்னத்தில் நிலைய அலுவலர் சந்தானம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.மேலும் தீயணைப்பு சக வீரர்கள் நீத்தார் நினைவு சின்னத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து தீ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தி சிலையிலிருந்து அண்ணா சாலை வழியாக ஊர் வலமாக வந்து பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தனர்.

தீ விபத்து நிகழும் போது முன் தடுப்பு நடவடிக்கையாக 101 எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற துண்டுப்பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதைப் போல,மாவட்டம் முழுதும் உள்ள 12 -க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களிலும் தீத்தடுப்புக்குழுவினர் பணியின் போது உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top