புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்எஸ்.ரகுபதி பங்கேற்று (16.04.2022) வளர்ச்சித் திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
பின்னர் சட்ட அமைச்சர் பேசியதாவது: பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், வளர்ச்சித் திட்டப் பணிகள் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரிமளம் ஊராட்சி ஒன்றியம், உசிலம்பட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை மற்றும் மேல்நிலைப்பட்டி ஊராட்சி, பூனையன்குடியிருப்பு கிராமத்தில், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே அரசின் நலத்திட்டங்களை பெறும் பொதுமக்கள் இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி .
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, அமுதவள்ளி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.