Close
நவம்பர் 22, 2024 12:38 மணி

விவசாயிகளுக்கு ஓராண்டில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கி சாதனை: முதலமைச்சர் பெருமிதம்

ஈரோடு

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கடந்த ஓராண்டில் ஒரு லட்ச இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது என்பது விவாசயிகளின் குடும்பங்களை மட்டுமல்ல தமிழகத்தையே வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லப்பட்டுதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஓராண்டில் ஒரு லட்சம் இலவச மின்சார வசதி பெற்ற விவசாயிகளுடனான முதலமைச்சரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

இதனையொட்டி ஈரோடு உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளிலும் மின்வாரியத்தின் சார்பாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணெலி காட்சி வாயிலாக இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

பின்னர் விழாவின் பேசிய முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் கலைஞர் என்றும் கடந்த ஓராண்டில் ஒரு லட்ச இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது விவாசயிகளின் குடும்பங்கள் மட்டுமல்ல தமிழகத்தையே வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லப்பட்டுதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஈரோட்டில் புதிய இலவச மின்சாரம் பெறுவதற்கான சான்றுகளை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பயானிகளுக்கு வழங்கினார். இந்த ஒரு லட்சம் மின்சாரம் பயனாகளில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 3000 பயானிகள் பயனடைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூரத்தி, மேயர் நாகரத்தினம் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் ,விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top