புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதேபோல், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் 18 -ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19 -ஆம் தேதி தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20 -ஆம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்தமிழகம், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:
தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் 10 செ.மீ., பேராவூரணி, காட்டுமன்னார் கோவிலில் தலா 6 செ.மீ., மதுக்கூரில் 5 செ.மீ., பட்டுக்கோட்டை யில் 4 செ.மீ., சீர்காழி, நெய்வேலி, பெரியகுளம், ஒரத்தநாடு, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.