Close
நவம்பர் 22, 2024 9:00 மணி

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… டால்ஸ்டாய்.. போரும் அமைதியும்..

அலமாரியிலிருந்து புத்தகம்

டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவல்

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…போரும் அமைதியும் – டால்ஸ்டாய்

1869 -இல் இந்த நாவல் வெளிவந்தது. ரஷ்ய பதிப்பில் 4 பாகங்கள், இரண்டு முடிவுரைகளோடு இருக்கும் இந்த நாவலை டால்ஸ்டாயே கூட ‘நாவல்’ என்று கருதவில்லை.

1805 -இல் தொடங்கி 1820 வரை பதினைந்து ஆண்டுகள் ரஷ்ய சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், 1812-இல் நெப்போலியனின் படையெடுப்பு ரஷ்ய சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும் விவரிக்கும் இந்தப் படைப்பை நாவல் என்றோ, வரலாற்று புத்தகம் என்றோ, நீண்ட காவியம் என்றோகூட அழைக்கக் கூடாது என்பதே டால்ஸாயின் கருத்தாக இருந்தது.

டால்ஸ்டாயைப் பொறுத்த வரையில் அவர் எழுதிய முதல் ‘உண்மையான’ நாவலாக 1877-இல் வெளிவந்த ‘அன்னா
கரனீனா’வையே குறிப்பிட்டிருக்கிறார்.

பெஷுகோவ், பொல்கொன்ஸ்கி, ரொஸ்தோவ், குராகின், துருபெட்ஸ்கொய் ஆகிய ஐந்து வெவ்வேறு மேல்தட்டுக் குடும்பங்களின் பார்வையில் 1805 லிருந்து 1820 வரை ரஷ்ய சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கும் போரும் அமைதியும் நாவலுக்கு முதலில் ‘1805’ என்ற தலைப்பைத்தான் டால்ஸ்டாய் தர விரும்பினார்.

பின்னர்தான் போரும் அமைதியும் என்று அதன் தலைப்பை மாற்றினார். ரஷ்ய மொழியில் இந்தத் தலைப்பு ‘வாய்னா இ மீர்’ என்று உச்சரிக்கப்படுகிறது. அமைதி என்ற பொருளைக் குறிக்கும் ரஷ்ய சொல்லான ‘மீர்’ என்பது ‘உலகம்’ அல்லது ‘பிரபஞ்சம்’, ‘மனித வாழ்க்கை’ என்பதையும் குறிக்கக் கூடியது என்று ரஷ்ய விமர்சகர் செர்கெய் போகாரோவ் எழுதியிருக்கிறார்.

சரித்திரத்தில் நிகழ்ந்த ஒரு போருக்கு உள்ளே செயல்பட்ட ஆயிரமாயிரம் மனிதர்களின் உணர்வுகளையும், உன்னதங் களையும், இழிவுகளையும், வலிகளையும் துல்லியமாகக் காட்டும் டால்ஸ்டாயின் கலை பிரமிக்கப்படுகிறது.

போர்களை மங்காத வீரத்தின் பிறப்பிடம் என்றும், புகழின் விளைநிலம் என்று குருட்டுத்தனமாகக் கொண்டாடும் மனிதர்களின் கருத்தினை புதினத்தின் வருணனை மிகத் தெளிவான முறையில் ஆனால் அதே சமயம் மிக நாசூக்கான முறையில் சாடுகிறது.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top