Close
நவம்பர் 22, 2024 11:51 காலை

புதுக்கோட்டை: கலை பண்பாட்டுத்துறை போட்டிகளில் வென்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசளிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில், நடத்தப்பட்ட கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கான காசோலைகளை ஆட்சியர் கவிதாராமு வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில், நடத்தப்பட்ட கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (18.04.2022) நடந்த நிகழ்வில் (18.04.2022)  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,  காசோலைகளை வழங்கி வாழ்த்தினார்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட , மாநில அளவிலான கலைப் போட்டிகளை  நடத்திட ஆணையிட்டிருந்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பரத நாட்டியம், குரலிசை, கருவியிசை, கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இக்கலைப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.6,000 -மும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.4,500 -மும், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3,500 -மும் என வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் மு.க.சுந்தர், மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை யாசிரியர் கோ.மா. சிவஞானவதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top