Close
நவம்பர் 22, 2024 11:24 மணி

புதுக்கோட்டை : அரசுப் பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

புதுக்கோட்டை

பொதுத்தேர்வுகள் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பேசிய புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில்  (19.04.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  ஆட்சியர் பேசியதாவது:பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத்தேர்வு கள் 05.05.2022 முதல் 31.05.2022 வரை நடைபெற உள்ளது.  புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்களும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 30 தேர்வு மையங்களும், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 27 தேர்வு மையங்களும் என 91 தேர்வு மையங்களில், மேல்நிலை முதலாமாண்டு தேர்வினை 21,017 மாணவ, மாணவிகளும், மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வினை 19,332 மாணவ, மாணவிகளும், பத்தாம் வகுப்பு தேர்வினை 23,298 மாணவ, மாணவிகளும் எழுத உள்ளனர்.

அரசு பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்தும் வகையில் தேர்வு மையங்கள், வினாத்தாள் மையங்கள், விடைத்தாள் மையங் கள் போன்ற இடங்களில் போதுமான காவலர்களை பணியில் அமர்த்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள காவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியம் பணி மேற்கொள்ள வேண்டும். சிறப்பு பேருந்துகளை இயக்கிட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பணி மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தேர்வுகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படையினர் கண்காணிப்பு அலுவலர்களை கொண்டு தேர்வு மையங்களில் சோதனை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அரசு பொதுத்தேர்வுகளை மாணவ, மாணவிகள் சிறப்பாக எழுதும் வகையில் தேவையான வசதிகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் கவிதாராமு.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெ.ஜெரினா பேகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் எம்.மஞ்சுளா, மணிமொழி, முனைவர்.ராஜாராம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top