Close
செப்டம்பர் 20, 2024 3:35 காலை

புதுகை ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழா

புதுக்கோட்டை

புதுகை ஆஞ்சநேயர்கோயிலில் நடந்த ராமநவமி விழா

புதுக்கோட்டை தெற்கு 3-ஆம் வீதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் நடந்தது.

புதுக்கோட்டை தெற்கு 3 -ஆம் வீதி மார்க்கெட் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடந்தது.

புதுக்கோட்டை
புதுகை ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த ராமநவமி விழாவில் பங்கேற்றோர்

நிறைவு நாள் விழாவில் சீதா ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற்றது.  விழாவில் ராமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் அணிவிக்கப்பட்டு, பட்டாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும் ராமருக்கு சிறப்பு திருமஞ்ச னம் மற்றும் மகாதீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஆலயத்திலுள்ள ஆஞ்சிநேயர் சுவாமிக்கு ஆலய சிவாச்சாரியர் கே.மணிகுருக்கள் தலைமையில் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது பட்டாபிஷேகத்தைமுன்னிட்டு ஸ்ரீனிவாச சுந்தர்ராஜ் பாகவதரின் ராமாயண உபன்யாசம் மற்றும் சிறுவர் சிறுமியர்களின் இசை கச்சேரியும் பெரியவர் களின் கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

புதுக்கோட்டை
ராமநவமி கொண்டாட்டம்

ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் முன்னிட்டு தினமும்பெருமாளுக் கும், ராமருக்கும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராத னையும், நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஆனந்த் தலைமையில் அனுமன் திருச்சபை யினர் ஆன்மிக நெறியாளர்கள் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில்,  ஆன்மீக அன்பர் பூரணிசெந்தில்  உள்பட  திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top