Close
செப்டம்பர் 20, 2024 3:37 காலை

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை ஆண்டுக்கூட்டம்

புதுக்கோட்டை

புதுகை கேகேசி அரசு மகளிர் கல்லூரியில் நடந்த வரலாற்றுத்துறை ஆண்டுக்கூட்டத்தில் பேசிய தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துறை ஆண்டு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதுகலை வரலாற்றுத்துறை ஆண்டு கூட்டம் கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது .

புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளில் உயிரினங்களின் பல்வகைமை பற்றி புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர்  மணிகண்டன் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படும் தகவல்கள் இடைக்காலத்தைச்சேர்ந்த சுற்றுச்சூழலையும், உள்ளூர் பகுதியில் காணப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றியும் அறிந்துகொள்ள நேரடி ஆதாரமாக இக்கல்வெட்டுகள் விளங்குகின்றனர். இதன் மூலமாக கடந்த கால இயற்கை சூழலையும் தற்போதைய இயற்கை சூழலையும் ஒப்புநோக்கும் போது பெருவாரியான உயிரின வளங்களை நாம் இழந்திருப்பதை புரிந்துகொள்ள முடியும்.

கடந்த காலத்தில் உள்ளூரில் இருந்த மரங்கள் , தாவர வகைகளை மீட்டுருவாக்கம் செய்வதன் மூலம் பழமையான இயற்கை சமநிலையை சீர்படுத்த இயலும். நமது சூழலுக்கு சற்றும் ஒவ்வாத யூக்காலிப்ட்டஸ் உள்ளிட்ட மரங்களை நாம் முழுவதுமாக கைவிட்டு நமது பண்டைய இயற்கையான உள்ளூர் சிற்றினங்கள் அடங்கிய வனங்களை உருவாக்குவது காலத்தின் தேவை என்றார் மணிகண்டன்.

நிகழ்வில் முனைவர் சரளா, முனைவர்.மாலதி மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர். முனைவர் காயத்திரிதேவி வரவேற்புரையாற்றினார். இறுதியாக இறுதியாண்டு மாணவி ஷாலினி நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top