மே 4-ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையில் கவனத்தை ஈர்த்து அரசு போக்கு வரத்துக்கழக ஓய்வூதியர்களின் தீர்க்கப்படாத நீண்ட காலப் பிரச்னைகளுக்கு தீர்வை தருகின்ற வகையில் கவனத்தை ஈர்த்திட தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக மற்றும் தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம். ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் அந்தந்த பகுதிகளில் கோரிக்கை மனு அளிக்கப் படுகின்றது.
அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் நடைமுறையிலுள்ள ஓய்வூதியத் திட்டத்தை அரசு பொறுப்பேற்று நடத்திடவும், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் உயர்ந்துவிட்ட பழைய, புதிய அகவிலைப்படி உயர்வு எழுபத்தி எட்டு மாத கால நிலுவைத் தொகையை ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்குவது.
அரியர்ஸ் தொகை வழங்கிடவும், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், 25 வருடகாலமாக போக்குவரத்து கழகத்தில் வாரிசு பணிக்கு பதிந்து காத்திருக்கின்ற தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்குவது உள்ளிட்ட போக்குவரத்து ஓய்வூதியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் தொழிற்சங்கம் சார்பில் திருவையாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக தஞ்சாவூர் மத்திய தெற்கு மாவட்ட செயலாளருமான துரை. சந்திரசேகரன் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை தலைமையில், மாநில தலைவர் துரை .மதிவாணன், நிர்வாகிகள் கே.சுந்தரபாண்டியன், அ.சுப்பிரமணியன், எம்.மாணிக்கம், எஸ்.மனோகரன், ரெஜினால்டுரவீந்திரன், என்.சிவகுமார் , பி.குணசேகரன், ஆர். இளங்கோவன், கே.சோமசுந்தரம், டி.தங்கராசு ஆகியோர் மனுவினை அளித்தனர்.
தஞ்சை சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநகர செயலாளரு மான டி.கே.ஜி. நீலமேகம் , பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர்,மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலா ளர், பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டது.