புதுக்கோட்டை கிளை இந்திய மருத்துவ சங்கம் செயற்குழுக் கூட்டம் மற்றும் தனியார் மருத்துவமனை வாரியக் கூட்டம் இந்திய மருத்துவ சங்கம் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளையின் தலைவர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்து அரசுடன் இணைந்து கொரோனா நோய் முன்தடுப்பு மற்றும் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டை கிளை செயலாளர் டாக்டர் முகம்மது சுல்தான் வரவேற்புரையாற்றினார். பின்னர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளள மாநில தனியார் மருத்துவமனை ஆலோசனைக் கூட்டத்தில் புதுக்கோட்டை கிளையின் சார்பாக வைக்கப்பட உள்ள முக்கிய கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து விளக்கமளித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட தனியார் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சலீம், மருத்துவமனைகளில் பணியாற்றும் தொழிலாளர் நலன், தீயணைப்பு, கட்டிட நிலைப்பாடு, மருத்துவ கழிவு, மாசுகட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி , மின் வாரியம் மற்றும் சுகாதார சான்று பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தின ராகபுதுக்கோட்டை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ராஜராஜேஸ்வரி கலந்து கொண்டு, ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை மற்றும் மருத்துவ கழிவுகளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் முறைகள் குறித்து செயல் விளக்கமளித்தார்.
இதில் டாக்டர்கள் சையது முகம்மது சுரேஷ்குமார், ராமமூர்த்தி, ராஜேந்திரன், ராம்ராஜ், சுப்பிரமணியன், நந்தகுமார், செந்தில், அருண் சாரதாமணி, நவரத்தினசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிதிச் செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.