Close
நவம்பர் 22, 2024 2:32 மணி

பதவிக்கு வந்துள்ள பெண்கள் தனித்துவமுடன் செயல்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே கவிநாடு கிழக்கு ஊராட்சியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆட்சியர் கவிதாராமு

பதவிக்கு வந்துள்ள பெண்கள் அவர்கள் தனித்துவமுடன் செயல்பட தகுதிகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கிராமசபைக் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை ஊராட்சி, ஒன்றியம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (24.04.2022) சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்றத் தலைவர்  ரெங்கம்மாள் பழனிச்சாமி  தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:கிராமங்கள் வளர்ச்சியையும், அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற் றும் வகையில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறு கிறது.  பெற்றோர்கள் , பள்ளிக் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தை கவனிப்பதோடு அவர்களின் உடல்நலனை யும் பேணிகாக்கும் வகையில், சத்தான உணவுகளை அளிக்க வேண்டும். கல்வியில் சிறந்தோங்க தமிழக அரசின் திட்டங் களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உள்ளாட்சியில் பொறுப்புகளுக்கு பெண்களுக்கு தமிழக அரசு 50 சதவீதம் ஒதுக்கீடு   அளித்துள்ளது. இந்த வாய்ப்பில் பதவிக்கு வந்துள்ள பெண்கள்  தனித்துவமுடன் செயல்படும் வகையில்  தகுதிகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜா,  சிறப்பு கிராம சபைக் கூட்டத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்  அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி யினை மக்கள் முன்னிலையில் வாசித்தார்.
இதில்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அயினான், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் சம்பத், ஒன்றியக்குழுத் தலைவர் பி.சின்னையா, முன்னோடி வங்கிகளின் மேலாளர் ரமேஷ்,  வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.எஸ்.குமாரவேலன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top