கோவை பீளமேடு மணி மஹாலில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அழைப்பு விடுத்துள்ள காலத்தின் தேவை கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமையே மாநாடு நடைபெற்றது.
தலைவர் ஜெய.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பேராசிரியர் மு.திருமாவளவன் கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக தலைவர் இரா. அருணாச்சலம் வரவேற்புரையாற்றினார்.
பொதுச் செயலாளர் க.சி.விடுதலைகுமரன் நோக்கவுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சிபிஐ தேசிய நிர்வாகக்குழு பிளய் விஸ்வம் எம்பி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா பொது செயலாளர் எம்எஸ்.ஜெயக்குமார், யுசிபிஐ மாநில செயலாளர் மா.சுந்தர்ராஜன், கம்யூனிஸ்ட் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் அஜய் கோஷ்.
லெனின் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் கா. ஸ்டாலின், ஆர்எம்பிஐ அகில இந்திய சேர்மன் கே.கங்காதரன், தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, இந்திய ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஜி.ஏ.சுபஹான், லாக்கப் நாவலாசிரியர் மு.சந்திரகுமார், இடதுசாரி சிந்தனையாளர் மார்ட்டின், இடது ஒற்றுமைக்கான தோழர்கள் முருகேசன், பரசுராமன்.
இடதுசாரி தமிழ் தேசிய மையம், தமிழ் தேசிய விடுதலை இயக்கம், சிபிஐ சிபிஎம், மக்கள் ஜனநாயகம் சமூக சமத்துவ கூட்டமைப்பு தமிழ் நாடு சோசலிச மையம், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர மக்கள் பாசறை இந்திய ஐக்கிய பொதுவுடைமை கட்சி ஆகிய இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கவிஞர் பாட்டாளி கவிதை வாசித்தார். கவிஞர் கோமகள் மற்றும் கோவை மனோகரன் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.