புதுக்கோட்டையில் எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,
புதுக்கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பி சி ஆர் ஏ இணைந்து எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணியை (24-04-2022) புதுக்கோட்டையில் நடத்தினர்.
இதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மதுரை மேலாளர் எல் . மிருதுபாஷினி பங்கேற்றார். ஏடிஎஸ்பி . பி கீதா விழாவிற்கு தலைமை வகித்து எரிபொருள் சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். முன்னதாக எரிபொருள் சேமிப்பு உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை ஏடிஎஸ்பி பி. கீதா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி தலைமை தபால் அலுவலகம், பழனியப்பா கார்னர், பிருந்தாவனம், வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து மீண்டும் தீயணைப்பு துறை அலுவலகத்தை வந்தடைந்தது
இதில், எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், உள்ளிட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
எரிபொருள் சிக்கனம் குறித்த பிரசுரங்களையும் பேரணியில் பொதுமக்களிடம் வழங்கினர். விழிப்புணர்வு பேரணியில் புதுக்கோட்டை மாவட்ட இண்டேன் விநியோகிப்பாளர்களும், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும், வைரம் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய டி ஷர்ட், கேப் மற்றும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சானிடைசர், மாஸ்க் கொடுக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை ஸ்ரீ சிந்தாமணி கணபதி இண்டேன் கேஸ் முகவர் செய்தனர்.