Close
செப்டம்பர் 20, 2024 9:52 காலை

அலமாரியிலிருந்து புத்தகம்… பிரமிள் கவிதைகள்…

அலமாரியிலிருந்து

பிரமிள் கவிதைகள்

அலமாரியிலிருந்து… பிரமிள்.. கவிதைகள்…

பல வருடங்களுக்கு முன்னரே பிரமிளின் படைப்புகள் முழுவதையும் வாசித்து முடித்து விட்டேன். இன்றும் கூட எப்போதாவது அலமாரியிலிருந்து எடுத்து தூசு தட்டுவேன், என் மீது படிந்த புழுக்கங்களை துடைத்தெறிய. இன்றைய தமிழ்க்கவிதையின் முன்னோடி பிரமிள் என்று சொல்லலாம்.

சிறகிலிருந்து பிரிந்த இறகு.
காற்றின் தீராத பக்கங்கள்.
ஒரு பறவையின் வாழ்வு.

இந்த கவிதையின் உள்ளீடுகளில் புதைமமாகப் படிந்திருக்கும் களிம்புகள் ஏராளம். இந்த கவிதை பிரவேசிக்கும் நிகழ் பிரதேசம் அநேகமாக வானமாகவே இருந்திருக்க வேண்டும்.

நிலத்துக்கும், வானுக்கும் இடைப்பட்ட பகுதியில், அதேவேளை நிலத்தில் இருந்து சற்று உயர்பகுதியில்தான் காற்றின் தீராத தழுவல்கள் / அழுத்தங்கள் தொடர்ந்து நிகழும் அல்லது சம்பவிக்கும். வானில் பறக்கும் பறவையில் இருந்து பிரிந்த இறகு தரைக்கு இடைப்பட்ட தூரத்தில் பறவைக்கான காவியத்தை எழுதியிருக்கும் என்ற ஐயப்பாட்டுடன் இந்த கவிதையின் மையக்கருத்தை நகர்த்தலாம்.

இறகுகளின் தொகுதியைச் சிறகு என்பார்கள். சிறகுகளின் கூட்டத்தில் இருந்து இறகு எதற்கு பிரிய வேண்டும்?. அதன் அதிகபட்ச வேண்டுதலே மண்ணில் வீழ்வதுதானா?. என்கிற ஆழமான கேள்வியை தீராத பக்கங்கள் என்ற சொற்பதம் ஊட்டி கவிதையைச் சிந்தனைக்குட்படுத்துகிறார்.ஆயிரம் செய்யுள்களில், பல்லாயிரம் உரைநடைகளில் பலர் சொல்லிப்போன காவியங்களைப் பிரமிள் எனும் கவிஞர் நான்கைந்து வரிகளில் கூறிவிட்டார்.

ஒரு படைப்பாளி, தன் படைப்பின் வழியே அடுத்த தலைமுறையினரை உருவாக்கிச் செல்வது காலத்தின் தேவை. அதைச் செவ்வனே செய்த பிரமிளை நினைவு கூறுவோம்..

இங்கிலாந்திலிருந்து… சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top