Close
செப்டம்பர் 20, 2024 9:01 காலை

இல்லம்தேடி கல்வித்திட்டம்: மாணவர்களிடம் தனித்திறனை கண்டறிய வேண்டும்..

புதுக்கோட்டை

இல்லம்தேடி கல்வி

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மாணவர்களிடம் உள்ள தனித்திறனைக் கண்டறிந்து அதனை வெளிக்கொணர செய்ய வேண்டும் என்றார் வட்டாரக் கல்வி அலுவலர் கலா.

புதுக்கோட்டை மாவட்டம்,அன்னவாசல் ஒன்றியம் குடுமியான் மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குட்பட்ட குடியி ருப்பு பகுதிகளில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களை அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் கலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தன்னார்வலர்களிடம் பேசியதாவது: குழந்தைகள் அற்புதமாணவர்கள்,எப்போதும் எதையாவது கற்றுக் கொண் டே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். அத்தகை ய குழந்தைகள் தற்பொழுது கல்வி பெறுவதில் கொரோனா நோய்த்தொற்று காலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இதனால் குழந்தைகள் உடல் நலத்திலும் மன நலத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் அவற்றிலிருந்து குழந்தைகளைவெளிக்கொ ணர்ந்து இயல்பான கற்றல் சூழலை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் விரும்பிச் செய்வதையே செயல்பாடுகளாக மாற்றி எளிய பாடப்பொருள்களைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

குழந்தைகள் மீது எவ்வித பாகுபாட்டையும் காட்டக் கூடாது. குழந்தைகள் உங்களை அக்கா, அம்மா என உரிமையோடு அழைக்கும் படி நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களிடம் உள்ள தனித்திறனைக் கண்டறிந்து அதனை வெளிக்கொணர செய்ய வேண்டும் என்றார்.

முன்னதாக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னவாலர்கள் கிருத்தி கா,மஞ்சுளா, திவ்யபாலா ஆகியோருக்கு இல்லம் தேடி திட்ட மையத்திற்கு தேவையான எழுதுபொருள்கள்,சார்ட் போன்ற கற்றல் கற்பித்தலுக்கான தேவையான உபகரணங் களை வட்டாரக் கல்வி அலுவலர் கலா வழங்கினார்.

நிகழ்வின் போது பள்ளித்தலைமையாசிரியர் சுமதி,இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, குடுமியான்மலை பள்ளி ஆசிரியர் ஸ்ரீராம், பிரிட்டா ஆகியோர் உடன் இருந்தனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top