Close
நவம்பர் 25, 2024 5:27 மணி

சஞ்சீவி பருவதத்தின் சாரல்… பாரதிதாசன்…

பாரதிதாசன்

பாரதிதாசன் கவிதைகள்

சஞ்சீவி பருவதத்தின் சாரல்…

“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்! – இது ஒரு அறிவியல் புனைவு க(வி)தை என்பதை வாசிக்கும் போது உணரலாம்.

பாரதிதாசனின் கவிதைகளில் முதன்மை பெறுவது சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை.

சிருங்கார ரசத்தைச் சிறப்பாகக் கையாளும் முறைமையில் சங்க கால காலத்தையே அப்படியே நமக்கு நினைப்பூட்டு கின்றன. இன்றைய தமிழ்க் கவிகளிலே இந்த ரசத்தை அழகாகக் கையாளுந்திறமை பாரதிதாசனுக்கு மட்டுமே உண்டு என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை.

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்கள் இயற்கையின் அழகில் மனத்தைப் பறிகொடுத்து கவிபாடும் இயல்புடையோராய் இருந்தனர். அவர்களுக்கு இணையாக தமிழ் கவிஞர்களும் இருந்திருக்கின்றனர்.
அந்த வகையில் தொல்காப்பியர், சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், மாணிக்கவாசகர், சேக்கிழார், கம்பர், …, பாரதியார் வரிசையில் பாரதிதாசனும் தமிழ் வானின் ஒப்பற்ற விண்மீன்…

கனக சுப்புரத்தினத்தின் பாடலில் ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்து இதுதான் எனக்குப் பிடிக்கும் என்று காட்டுவது இயலவே இயலாது! ஒவ்வொன்றும் ரத்தினம்..

இங்கிலாந்திலிருந்து… சங்கர்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top