புதுக்கோட்டை மாவட்டம்,திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மே-1 கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கலந்துகொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற மே தின கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு (01.05.2022) கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில் (மே-1 ) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டப் பொருளாக, கிராம ஊராட்சி நிர்வாகம் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சியில் நடைபெறும் நலத்திட்டப் பணிகள் மற்றும் நிதி செலவினங் கள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், சுகாதாரம் (பள்ளிக்கழிப்பறை மற்றம் அங்கன்வாடி மைய கழிப்பறைகள்), ஊட்டச்சத்து இயக்கம்.
பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்கள் உற்பத்தியை தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை (உழவர் நலத்துறை), நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம், குழந்தைகள் அவசர உதவி எண், முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை உள்பட தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு எடுத்து கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர் கவிதாராமு.
இக்கூட்டத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ருதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், ஊராட்சிமன்றத் தலைவர் மகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.