புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை கேட்பு முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் (02.05.2022) நடைபெற்றது.
இதில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 320 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர்.
இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின்கீழ், இயற்கை மரணம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் மூலமாக இயற்கை மரணமடைந்த 20 மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்திற்கு ரூ.3,40,000 காசோலையி னையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,000 மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டி, ஊன்று கோலும்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.54,790 மதிப்பீட்டில் விலையில்லா மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும் என ஆகமொத்தம் ரூ.4,03,790 மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி வழங்கினார்.
இதில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.