Close
செப்டம்பர் 20, 2024 3:57 காலை

1  முதல் 9   –ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

சென்னை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 9 -ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் என்று- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பகலில் மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது. கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் இளநீர், தர்பூசணி பழக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இதனால் வெப்பநிலை அதிகரிக்கக்  கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தேர்வு இல்லாத நாட்களில் 1- முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும் வெயிலின் தாக்கம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top