Close
நவம்பர் 23, 2024 12:44 மணி

கார்ல் மார்க்ஸ் பிறந்த (மே.5) நாளில்..

உலகம்

கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் இன்று

கார்ல் மார்க்ஸ் காலத்தில் உழைப்பாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி உபரி மதிப்பை பெற வேண்டியிருந்தது. ஆனால் இன்று உறிஞ்சப்படுவதையே உணர முடியாத அளவுக்கு சுரண்டல் முறையில் விஞ்ஞான தொழில் நுட்பம் முதலாளி வர்க்கத்திற்கு ஆயத்தமாகி விட்டது.

இதனால் சுரண்டும் முதலாளியை உழைக்கும் மக்கள் நேரில் பார்ப்பது அரிது. எனவே எதிர்ப்பு உணர்வு தோன்றுவதும் அரிதாகி விட்டது. இதை புதுப்பிக்க அறிவியல் ரீதியாக சமத்துவத்தை கொண்டுவர ஆய்வு செய்த அந்த ஆளுமை இன்றும் நமக்கு தேவைப்படுகிறார்..

மூளைத்திறனை அதிகம் பயன்படுத்திய ஒரு ஆளுமை மார்க்ஸ் என்று புள்ளி விவரம் சொல்லுகிறது. அவர் இன்று இல்லை என்று முதலாளி வர்க்கம் நம்பவில்லையென்பதும், அவர்களுக்கான அச்சுறுத்துதலாக அமையும் புரட்சிக்கர வரிகளின் அவசிய தேவை இன்னும் தீரவில்லையென்பதும்
நிதர்சனம்.. இதை அவரின் பிறந்த நாளில், நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

உலகம்
லண்டனில் உள்ள ஹைகேட் நினைவிடத்தில் உள்ள கார்ல் மார்க்ஸ் உருவச்சிலை

லண்டன் ஹைகேட் நினைவிடத்தில் கம்யூனிஸ்ட் அறிக்கை யின் புகழ்பெற்ற ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே மார்க்ஸ் சொன்ன இன்னொரு வாசகமும்..
தத்துவவாதிகள் பல்வேறு விதங்களில் இந்த உலகத்தைப் பற்றிய விளக்கத்தை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள்; என்றாலும், அதை மாற்றுவதுதான் முக்கியமான விஷயம்.”

>>>இங்கிலாந்திலிருந்து..சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top