சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் விக்னேஷ் மரணத்திற்கு நீதி கேட்டு தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சமீபகாலமாக காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகின்ற நபர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தும் செயல்களும், மேலும் அவர்களை படுகொலை செய்யும் அளவிற்கு போலீசார் தாக்குதல் களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. சமீபத்தில் கடந்த 19-ம் தேதி மத்திய சென்னையில் இளைஞர் விக்னேஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலை யத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அழைத்துச் செல்லப் பட்ட சில நாட்களுக்குள் அவர் காவல் நிலையத்தி லேயே அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
விக்னேஷ்சின் உடல் பிரேதப் பரிசோதனையில் லத்தியால் பலமாக தாக்கிய காயங்கள் இருந்துள்ளது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.விக்னேஷ் படுகொலை செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும்.
குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது. நேர்மையான சட்ட விசாரணை நடத்த வேண்டும். இளைஞர் விக்னேஷ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
அவரது குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் காவல்நிலைய சித்திரவதைகளும் படுகொலைகளும் தடுத்து நிறுத்த அரசு முன் வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் செயல்படுகின்ற அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் நேற்று மாலை தஞ்சை ரெயிலடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் பணிக் குழு உறுப்பினர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை வகித்தார்.
இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வடிவேலன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சி.பி.எம். எல். மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் அருணாச்சலம்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பலனிராஜன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் ராவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் யோகராஜ்.
எழுத்தாளர் சாம்பான், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நாத்திகன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினார்கள். தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் பொதுச்செயலாளர் அரங்க. குணசேகரன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார்.