Close
நவம்பர் 24, 2024 11:16 மணி

தஞ்சையில் ஜூன்.15 -ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக்கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24  -வது மாவட்ட மாநாடு ஜூன் 15 16  ஆகிய நாள்களில் தஞ்சையில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தஞ்சை மாவட்ட மாநாட்டை நடத்துவதற்கான வரவேற்புக் குழு கூட்டம்  (6~5~22) தஞ்சாவூர் கீழராஜவீதி கட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பொருளாளர் ந.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது .

மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, துணைச் செயலாளர் வீ.கல்யாணசுந்தரம், கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணன்,  மாவட்ட, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சி.சந்திரகுமார் பா.பாலசுந்தரம் , கோ. சக்திவேல் , ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் வாசு இளையராஜா, தஞ்சை மாநகர செயலாளர் ஆர். பிரபாகர்.

பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பூபேஷ்குப்தா, பேராவூரணி ஒன்றிய செயலாளர் ஆர்.பி. கருப்பையா, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் பாரதிமோகன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மருத்துவர் ச.சுதந்திரபாரதி, ஏஐடியூசி தொழிற் சங்கத்தலைவர்கள் வெ.சேவையா, தி.கோவிந்தராஜன், ஆர்.பி.முத்துகுமரன், தி.திருநாவுக்கரசு, ஹோசிமின், கிருஷ்ணன்,பாஸ்கர், கல்யாணிதேவி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட 24-ஆவது மாநாட்டை தஞ்சாவூர் காவேரி திருமண மண்டபத்தில் வருகிற ஜூன் 15,16 ஆகிய தேதிகளில் நடத்துவது.   15 -ஆம் தேதி மிகப்பெரிய பேரணியை தஞ்சையில் நடத்துவது.   தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைக ளில் தண்ணீர் தேக்கி பாதுகாத்திட வேண்டும், டெல்டா மாவட்டங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை ஒன்றிணைத்து தனியாக பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சாலை துவங்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்ற பயிற்சியும், கடன் உதவியும் ஒருங்கிணைத்து வேலை வாய்ப்புக்கான பெருந்திட்டம் கொண்டுவரவேண்டும், சாந்த பிள்ளை கேட் மேம்பாலத்தை நான்கு வழி சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோயில், பழைய பேருந்து நிலையம் எதிரில் நகரும் படிக்கட்டுடன் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாவட்ட  மாநாட்டில் வலியுறுத்தப்படவுள்ளது.

மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக வழக்கறிஞர் சி. சந்திரகுமார், செயலாளராக ஆர். பிரபாகர், பொருளாளராக தி. திருநாவுக்கரசு, துணைத்தலைவராக ந. பாலசுப்பிரமணி யம், துணைச் செயலாளராக ஆர்.பி. முத்துக்குமரன் ஆகியோர்  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மற்றும் வரவேற்புக் குழு விரிவாக பணிகளை மேற்கொள்ள நிதிக்குழு, விளம்பரக் குழு, உபசரிப்பு குழு, உணவுக் குழு, தொண்டரணி குழு என்ற பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டை சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top