Close
செப்டம்பர் 20, 2024 5:52 காலை

புதுக்கோட்டை குறுவட்ட அளவில் பேரிடர் மீட்பு பயிற்சி: ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை

குறுவட்ட அளவிலான பேரிடர் முதல்நிலை மீட்பாளர்களுக்கு முதல்நிலை ஒருநாள் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு  தொடக்கி  வைத்தார்.

புதுக்கோட்டை நகராட்சி, கோவில்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற  பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், குறுவட்ட அளவிலான பேரிடர் முதல்நிலை மீட்பாளர்களுக்கு, முதல்நிலை ஒருநாள் பயிற்சியினை  (09.05.2022) மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடக்கி வைத்து பேசியதாவது;

பேரிடர் காலங்களில் உடனடியாக அலுவலர்களுக்கு தகவலினை அளித்து முன்னிற்பவர்கள் தன்னார்வலர்கள் ஆவர். முதல்நிலை மீட்பாளர்கள் தாமாகவே முன்வந்து உதவி புரிகிரீர்கள். கிராமங்களில் ஏற்படும் பேரிடர் காலங்களில் முதல் தகவலினை அளிப்பவர்களும் முதல்நிலை மீட்பாளர்களே.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,500 முதல்நிலை மீட்பாளர்கள் உள்ளனர். முதல்நிலை மீட்பாளர்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும். விபத்து, ஆபத்து, பேரிடர் மற்றும் தீ விபத்து ஏற்படும் காலங்களில் முதலில் சென்று நிற்பது பேரிடர் முதல்நிலை மீட்பாளர்கள் ஆவர்.

இப்பயிற்சியில் பேரிடர் காலங்களில் செயல்படும் வழிமுறைகளும், பேரிடர் இடங்களில் செயல்படும் முறைகள் குறித்தும் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. முதல்நிலை மீட்பாளர்களின் அலைபேசி எண்களை தெரிவிப்பதன்மூலம், பேரிடர் காலங்களில் தொடர்பு கொள்வதற்கு உதவியாக அமையும்.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர் கவிதா ராமு

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்; அபிநயா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா, வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top