தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், புதுக்கோட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் ஆர்டிஓ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், ஆர்டிஓ தொண்டு நிறுவனம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கடந்த 23 ஆண்டுகளாக புதுகோட்டை மாவட்டத்தில் வேலை இல்லாத படித்த இளைஞர்கள், இளைஞிகளுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ள ஆர்டிஓ தொண்டு நிறுவனம் தற்போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத் தின் ஆதரவோடு வேலையில்லாத படித்த பெண்களுக்கான தொழில் பயிற்சியினை புதுக்கோட்டை, அரிமளம் என 90 பேருக்கும், இலங்கை மறுவாழ்வு மையங்களான தேக்காட்டுர், அழியாநிலை, தோப்புக் கொல்லை ஆகிய முகாம்களை சேர்ந்த 150 பெண்களுக்கு மூன்று மாத கால தையல் பயிற்சி வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மாவட்ட பயிற்சி அலுவலகத்துடன் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் குமரேசன் தலைமையில் ஆர்டிஓ தொண்டு நிறுவன இயக்குநர் குழந்தைவேலு முன்னிலையில் 250 க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் சென்னையை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான TRIUMPH,கரூர் EXCEL GROUP, புதுக்கோட்டை NK International நிறுவனத்தினர் என பல நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைக்கு செல்ல ஆர்வமுள்ள பெண்களை தேர்வு செய்து பணி நியமன கடிதங்களை வழங்கினர்.
மேலும் இருபத்தி ஒன்பது பெண்களுக்கு பயிற்சி சான்றிதழை உதவி இயக்குநர் குமரேசன் வழங்கினார்.ஆர்டிஓ தொண்டு நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இம்முகாமில் 1098 சைல்டு லைன் திருவரங்குளம் களப்பணியாளர் சுமதி.
அரிமளம் களப்பணியாளர் வசந்த பாரதி, திருமயம் களப் பணியாளர் ராஜலெட்சுமி, பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி, ஒருங்கிணைப்பாளர் முனியம்மாள், பயிற்றுனர் கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.