அறந்தாங்கியில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு மற்றும் சாதனை யாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நைனா முகமது கலை அறிவியல் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பால் நடத்தப்பட்டது.
அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் 17 -ம் ஆண்டு விழாவில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு நிகழ்வு சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ் மூலம் நடத்தப்பட்டது. திசைகள் அமைப்பின் 17 -ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 11 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சி.ஜே.ஆர்.மணி நல்லாசிரியர் விருதும், சமூக நலத்தோடு செயலாற்றி வரும் 21 இளைஞர்களுக்கு அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருதும், திசைகள் அமைப்பைச் சேர்ந்த 5 உறுப்பினர்களுக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
2022 -ம் ஆண்டிற்கான ‘திசைகள் வாழ்நாள் சாதனையாளர் விருது’ டாக்டர் ஸ்ரீதர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் .சக்திவேல் மற்றும் அறந்தை பாவா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விழாவிற்கு அறந்தாங்கி இந்திய மருத்துவர் கழக செயலாளர் டாக்டர் இப்ராம்ஷா தலைமை வகித்தார். கராத்தே கண்ணையன், கவிவர்மன், வர்த்தக சங்க பேரவை மாவட்டத் தலைவர் வரதராஜன், பாரத நேசன் என்.கணேசன, ஆசிரியர் சேதுராமன், பேராவூரணி நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெட்சிணாமூர்த்தி, ஆறுமுகம், டைமண்ட் பஷீர், பழனிகுமார், முபாரக் அலி, முஜிபுர் ரஹ்மான், டாக்டர் மாரிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளித் தாளாளர் முகமது பாரூக் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார். ரோபாடிக் விஞ்ஞானி கென்னித்ராஜ் அறிவியல் தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
முன்னதாக திசைகள் அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக் வரவேற்புரையும், அமைப்பின் தலைவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி தொடக்க உரையும், ஒருங்கிணைப்பாளர் சேது புகழேந்தி நன்றியுரையும் ஆற்றினர்