தெற்கு ஆசியாவிலேயே முதல் விருது பெறும் தமிழர்
மார்க்ஸை அம்பேத்காரை பெரியாரை படித்தவர்கள் எப்போதும் பிறருக்கு முன் மாதிரித்தான். அதுதான் மீண்டும் தற்போது நிரூபணமாகியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக உளவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் டாக்டர் ராம் மகாலிங்கத்துக்கு இந்த ஆண்டுக்கான ஹெரால்ட் ஜான்சன் விருது கிடைத்துள்ளது.
.
1996 -இல் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரையில் இந்தியாவில் இருந்து எவருமே பெறாத வேளையில் தமிழகத் தமிழராகிய இவர் பெற்றிருப்பது பெரு மகிழ்ச்சியினை அளிக்கிறது. இந்தியா மட்டுமல்ல தெற்கு ஆசியாவிலேயே இவ்விருதினைப் பெறும் முதலாமவர் டாக்டர் ராம் மகாலிங்கம்தான்.
.
சமத்துவம் – சமூக நீதியை மையமாகக் கொண்டு பணியாற்றிவரும் நமது பேராசிரியர் நிறவெறி – சாதிய மேலாதிக்கம் இரண்டுக்கும் இடையிலுள்ள நுட்பமான தொடர்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டு அதனைக் களையும் பணியினை மேற்கொண்டு வருவதற்காக இந்த விருது இவரைத் தேடி வந்திருக்கிறது.