Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

தஞ்சை பெரியகோயிலில் முழு அடிப்படை வசதிகள்: எம்பி பழனிமாணிக்கம் தகவல்

தஞ்சாவூர்

தஞ்சை பெரியகோயிலில் ஆய்வு மேற்கொண்ட திமுக எம்பி பழனிமாணிக்கம், ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர்

தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களுக்குதேவையானஅடிப்படைவசதிகள் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கவேண்டும் என அனைத்துதுறை அலுவலர்களிடம் தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் சுற்றுலாபயணிகளைகவரும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைவசதிகள் குறித்து தஞ்சாவூர் மக்களவை  உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்,  மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற் கொண்டனர்.

ஆய்வுசெய்த பின்னர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கூறியதாவது:உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், கழிவறைகள், சிற்றுண்டிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும்.

சுற்றுலாபயணிகளுக்கு எந்தவகையிலும் எந்தபாதிப்பும் நடக்காத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் பெரிய கோயிலைசுற்றிஉள்ள இடங்கள் அனைத்தும் தூய்மையாக இருக்கவேண்டும். பெரியகோவில் உள்ளேயும்,வெளியேயும் தடுப்பு அரண் அமைத்து ஒழுங்கு படுத்தவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் . எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தெரிவித்தார்.
இந்தஆய்வின் போதுதொல்லியல் துறைபராமரிப்புஉதவி இயக்குனர் சங்கர், மாநகராட்சிஆணையர் சரவணகுமார், இந்துசமயஅறநிலைத்துறை அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top