Close
செப்டம்பர் 20, 2024 6:44 காலை

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கோலாகல கொண்டாட்டம்

புதுக்கோட்டை

கைக்குறிச்சி பாரதி கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழாவில் பங்கேற்ற சான்றோர்கள்

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் முதல் நாளில் வெள்ளி விழா நினைவு கட்டடத் திறப்பு, மலர் வெளியீடு ஆகியவை மிகச்சிறப்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் எல்.தாவூத்கனி முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெள்ளிவிழா நினைவு கட்டத்தை திறந்து வைத்து, சிறப்பு மலரை வெளியிட்டார்.

புதுக்கோட்டை

சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சமூக நலனுக்காக உழைத்த மாணவி, குத்துச்சண்டையில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு நினைவுப் பரிசை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆசியுரை வழங்கி விழா பேருரையாற்றினார்.

மாலையில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்  சிறப்பாக நடைபெற்றது, விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், எம்எல்ஏ  -க்கள்    வை.முத்துராஜா, சி.விஜயபாஸ்கர், எம்.சின்னத்துரை,  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக  முன்னாள் துணை வேந்தர் சொ.சுப்பையா.

திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, தமிழ்ச்செம்மல்  விருதாளர்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி. ரா.சம்பத்குமார், கவிஞர் நா.முத்துநிலவன், கைக்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் ரெங்கநாயகி செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 முன்னதாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மு.பாலசுப்பிர மணியன் வரவேற்றார். நிறைவில்  முதல்வர் செ.கவிதா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top