Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

தமிழ்நாட்டில் முதன்முறையாக கழுதை பண்ணையை தொடங்கிய இளைஞருக்கு குவியும் பாராட்டு

தமிழ்நாடு

நெல்லை மாவட்டத்தில் தமிழகத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்ட கழுதைப்பண்ணை

தமிழ்நாட்டில் முதலாவதாக கழுதைப் பண்ணையை தொடங்கியுள்ள இளைஞருக்கு  பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதிக்கு அருகில் உள்ள துலுக்கபட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாபு. பட்டதாரி இளைஞர். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கழுதை பண்ணைய பாபு தொடங்கி உள்ளார்.

இந்த கழுதை பண்ணையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி, தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேசியதாவது:

கழுதை பாலில் பல்வேறு மருத்துவ குணம் உள்ளது. இந்த கழுதை பால் தாய் பாலுக்கு நிகராக செயல்படுகிறது. மனித எச்சிலில் உள்ள லைசை சைன் என்கிற ரசாயனம் கழுதை பாலில் அதிகமாக உள்ளது. இதனால் கழுதை பால் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகிறது.

தாய்ப்பாலுக்கு இணையாக சக்தி கொண்ட இந்த கழுதை பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் இது, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் கழுதை பால் விலை ரூ. 7000 -க்கு விற்கப்படுகிறது. இதனால் இந்த தொழில் பெரும் வளர்ச்சி அடையும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறினார்.

இந்தியாவில் தற்போது 1,40,000 கழுதைகள் மற்றும் தமிழ்நாட்டில் 1428 கழுதைகள் மட்டுமே உள்ளன. தற்போது தொடங்கப்பட்டு இருக்கும் இந்த பண்ணையில் 100 கழுதை கள் உள்ளன. ஒரு வருடத்தில் இதை 1000 கழுதைகளாக மாற்றுவது தான் எங்களுடைய நோக்கம். இவ்வாறு கழுதை பண்ணை உரிமையாளர் பாபு கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top