புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (16.05.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 282 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இம்மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், கோரிக்கை மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியில் இருந்து, முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட 7 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.37,800 மதிப்பிலான சிலிகான் குஷன் சீட்டும், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளுக்கு ரூ.17,100 மதிப்பிலான கார்னர் சீட் மற்றும் 2 குழந்தைகளுக்கு ரூ.18,000 மதிப்பிலான சி.பி. சேர் என ஆகமொத்தம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72,900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர கவிதா ராமு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.