Close
நவம்பர் 22, 2024 9:32 மணி

உலக தகவல் சமூக நாள் (மே 17) கொண்டாடப்படுகிறது…

உலகம்

மே 17 உலக தொலைத்தொடர்பு தினம்

உலகளவில் புதிய தகவல் தொழில் நுட்பங்களாலும் இணை யத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்க்க உலக தகவல் சமூக நாள் மே 17-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலக தகவல் சமூக நாள் என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005 -ம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் 1865 -ஆம் ஆண்டு இந்த நாளன்று நிறுவப்பட்டதைக் கொண்டாடும் விதமாக உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள் என அறியப்பட்டு வந்தது. 1973-ஆம் ஆண்டு இதற்கான தீர்மானம் மாலேகா-டொர்ரெமோலினோசில் நடந்த முழு அதிகாரம் கொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

உலக தகவல் சமூக நாளின் முக்கியமான நோக்கம் உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்களாலும் இணையத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்ப்பதாகும்.மேலும் இது எண்ணிம இடைவெளியைக் குறைப்பதற்கு உதவிடும் இலக்கையும் கொண்டுள்ளது.

நவம்பர் 2005 -ஆம் ஆண்டு நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாடு தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் (ICT) இன்றியமையாமை மற்றும் மாநாட்டில் முன்வைக்கப் பட்ட பல்வேறு எழுவினாக்களைக் குறித்துமான குவியத்தை ஏற்படுத்த மே 17-ஆம் நாளை உலக தகவல் சமூக நாள் என்று அறிவிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு வேண்டுகோள் விடுத்தது.

மார்ச்சு 2006 அன்று பொதுச்சபை அவ்வாறே தீர்மானம் (A/RES/60/252) நிறைவேற்றியது. முதல் உலக தகவல் சமூக நாள் மே 17, 2006 -ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. நவம்பர் 2006 துருக்கியில் உள்ள அன்டால்யாவில் நடந்த பன்னாட்டுத் தொலைதொடர்பு ஒன்றியத்தின் முழு அதிகாரம் கொண்ட மாநாடு இரு நிகழ்வுகளையும் ஒன்றுபடுத்தி உலகத் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளாகக் கொண் டாட தீர்மானித்தது.

இற்றைப்படுத்தப்பட்ட தீர்மானம் 68 உறுப்பினர் நாடுகளை யும் துறை உறுப்பினர்களையும் ஆண்டுதோறும் தேசியளவில் தகுந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top