Close
அக்டோபர் 5, 2024 10:33 மணி

ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கும்… புதுக்கோட்டை அரசு மனநல மையம்…

புதுக்கோட்டை

மாவட்ட மன நலமையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

மாவட்ட பழைய அரசு மருத்துவமனையில், இயங்கி வரும் மனநல சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை, தரமான உடை, தன்சேவை பெட்டகம், தொழில் பயிற்சி, விளையாட்டு, கலை வழி  சிகிச்சை, தோட்ட கலை சிகிச்சை, உயர் தரமான சிகிச்சை, குடும்பத்தினரை கண்டுபிடித்து மீண்டும் சேர்த்து வைத்தல், 102 மீட்பு வாகன வசதி உள்ளிட்ட சேவைகள் வழங்கபடுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார அளவில், வருவாய்த் துறை, காவல்துறை, நகராட்சி, உள்ளாட்சி, மாற்றுத்திறனாளி துறை, மருத்துவத்துறை உட்பட இதர அரசு துறையினர் உதவியுடன் ஆதரவற்ற மன நோயாளிகளை மீட்டு, இவர்களை மனநல  மருத்துவர் தெய்வநாயகம் தலைமையில் மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாவட்ட  அரசு மருத்துவமனை அதரவு அளித்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்தது, இருப்பிடம், உணவு வழங்கி இவர்கள் மனநோயிலிருந்து மீண்டவுடன் அவர்களது குடும்பத்தினரருடன் சேர்த்து வைக்கும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

இந்த வகையில், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மனநல மையத்தில், 7 மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் திரு.ரெங்கசாமி அவர்களுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கி, அவரது சகோதரர் திரு.முருகேசன் அவர்களுடன் அனுப்பி வைக்கபட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top