Close
நவம்பர் 22, 2024 9:53 காலை

ஈரோடு மாவட்டத்தில் மழை: கொடுமுடியில் அதிகபட்ச மழை பதிவு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை கொடுமுடியில் அதிகபட்சமாக 32 மி.மீ பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள், ஏரி, குளங்கள், ஓடைகள், தடுப்பு அணைகள் நிரம்பி வழிகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் அதிகமாக இருந்தது. மாலை 4 மணிக்குப் பிறகு பல்வேறு இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது.

ஈரோடு மாநகர் பகுதியில்   இரவு 7 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. ஆதலால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குண்டு குழியுமாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

இதேபோல் கொடுமுடி பகுதியில் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 32 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் அம்மாபேட்டை மொடக்குறிச்சி கொடிவேரி பவானி கவுந்தபாடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

ஈரோட்டில்  இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு: ஈரோடு-19, கொடுமுடி – 32, அம்மாபேட்டை – 24.8, மொடக்குறிச்சி – 21, கொடிவேரி – 15, பெருந்துறை – 3, தாளவாடி – 5.4, சத்தியமங்கலம் – 19, பவானிசாகர் – 5.8, பவானி – 11, சென்னிமலை-2, கவுந்தப்பாடி-2.2, குண்டேரிபள்ளம்-1.4

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top